About Us

அன்புடையீர்,
       வணக்கம். கோதென்பர்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்ற தமிழ் பேசும் நம் சொந்தங்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதே கோதென்பர்க் தமிழ்ச் சங்கம்.

       நமது நோக்கம் என்னவென்றால், புலம்பெயர்ந்து வாழும் நம் சொந்தங்கள் அனைவரும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வழிவகை செய்வதும், நம் குழந்தைகள், தமிழில் பேசவும், நம் மொழி, கலை கலாச்சாரங்களின் உன்னதங்களை நம் குழந்தைகள் மட்டுமல்லாது, இந்நாட்டு மக்களும் அறியும் வண்ணம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதாகும். அதற்காக ஆண்டுதோறும் நம் மொழி, கலை, கலாச்சாரம், உணவு சம்பந்தப்பட்ட வற்றை பறைசாற்றும் வண்ணமான நிகழ்ச்சிகளை நடத்தவும் தீர்மானித்துள்ளோம்.


Notice

Advertisment

Registration