சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்

சுவீடன் பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்தவரை, சுவீடனில் வதிவிட உரிமை (residence permit) உள்ளோருக்கு முற்றிலும் இலவசம். அதேவேளை, இந்தியாவில் இ ருந்து இங்கு வந்து கல்விக் கற்க வேண்டும் என்ற சூழலில், என்னென்ன செய்ய வேண்டும், எப்படி அணு க வேண்டும் என்ற விளக்கத்தினை இங்கே உங்கள் நன்மைக்காக தொகுத்துள்ளோம்

இதனை வெளியிடுவதில் சுவீடனின் கோத்தென்பர்க் நகர தமிழ்ச்சங்கம் பெருமைக்கொள்கிறது.

தமிழர்களின் வாழ்க்கை மேம்படுத்தல், தமிழர்களின் பண்பாடு, மொழி காத்தல், தமிழ் நிலத்தின் முன்னேற்றம் ஆகியவற்றில் கோத்தென்பர்க் தமிழ்ச்சங்கம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

சுவீடனின் உயர்கல்வி:

சுவீடன் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பொறியியல் அல்லது இளநிலை பொறியியல் கல்வியில் சேர முதலில் எந்தப் பல்கலைகழகங்களில் எந்தத் துறை சிறந்தது என அறிந்துக்கொள்ளுதல் நலம். அதேப்போல, உலகத் தர வரிசைகளில் எத்தகைய தர நிலையில் அப்பல்கலைக்கழகங்கம் இடம் வகித்துள்ளன என்பதனையும் அறிந்துக்கொள்ள வேண்டும். கல்விக்கட்டணமாக அரையாண்டிற்கு ஒருமுறை கட்ட வேண்டியத் தொகை 5, 50,000 ரூபாய் வரை ஆகும். அதேபோல, நுழைவுரிமை (visa) விண்ணப்பம் சமர்பிக்கும் பொழுதே, இரண்டாண்டிற்கான ஒட்டுமொத்த சராசரி வாழ்க்கைச் செலவான மாதம் 8370 சுவீடிஷ் குரோணர் அளவில் மாணவ, மாணவியரின் தனிப்ப ட்ட வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டும். இரண்டாண்டு கல்வியெனில் தோராயமாக 15 லட்ச ரூபாய் மற்றும் நான்கு ஆண்டுக் கல்வியெனில் தோராயமாக 30 லட்ச ரூபாய் வங்கிக்கணக்கில் வைப்பு வைத்திருக்க வேண்டும்.

கீழே அனைத்துத் தகவல்களும், இணைய முகவரியுடன் தொகுத்துள்ளோம்.

1) சுவீடன் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய கீழே உள்ள இணையதளம் செல்க:

https://studyinsweden.se/universities/

2) சுவீடன் பல்கலைக்கழகங்களின் தர வரிசை பற்றி அறிய:

https://en.wikipedia.org/wiki/List_of_universities_and_colleges_in_Sweden

3) விண்ணப்பம் குறித்தத் தகவல்:

மேலே உள்ளத் தகவல்களை எல்லாம் அறிந்த பின் விண்ணப்பங்கள் குறித்தும் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் அறிந்துக்கொள்ளல் வேண்டும்.

https://www.universityadmissions.se/

என்ற இணையத்தில் விண்ணப்பங்கள், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஆவணங்கள் குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கியுள்ளன. ஒரே விண்ணப்பத்தில் நான்கு பல்கலைக்கழகத்திற்கும் நான்கு பாடப்பிரிவிற்கும் விண்ணப்பிக்கலாம்.

4) ஆங்கிலப்புலமை:

ஆங்கிலப் புலமை சோதனையில் ( English Proficiency test) குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

https://www.universityadmissions.se/en/All-you-need-to-know1/Applying-for-studies/English-requirements/Internationally-recognized-English-test/

ஆனாலும், பல்கலைக்கழகத்தின் அயலகப் பிரிவினைத் தொடர்பு கொண்டு, தங்கள் கல்விச்சான்றிதழ், படித்த கல்வி மொழிக் குறித்துத் தெரிவித்து, ஆங்கிலப் புலமைச் சோதனை தேவையா என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

5) முதுநிலை மற்றும் இளநிலைக் கல்வி:

அடுத்ததாக, இளநிலை மற்றும் முதுநிலை கல்விக்கான அனுமதி விதிமுறைகள் குறித்து அறிய,

5அ) முதுநிலை கல்வி:

https://studyinsweden.se/universities/

6) விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்கள் குறித்து அறிய,

6அ) முதுநிலை கல்வி:

https://www.universityadmissions.se/en/All-you-need-to-know1/Applying-for-studies/Documenting-your-eligibility-for-studies/Instructions-for-Masters-applicants/

6ஆ) இளநிலை கல்வி:

https://www.universityadmissions.se/en/All-you-need-to-know1/Applying-for-studies/Documenting-your-eligibility-for-studies/Instructions-for-Bachelors-applicants/

7) விண்ணப்பிக்கும் முறை:

சுவீடனைப் பொறுத்தவரை அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அனைத்துப் பாடப்பிரிவிற்கும் ஒரே விண்ணப்பம் போதும். ஒரு மாணவர் அல்லது மாணவியருக்கு ஒரு விண்ணப்பம். விண்ணப்பத்திற்கான கட்டணம் 900 சுவீடீஷ் குரோணர், கிட்டத்தட்ட 7000 ரூபாய்.

கல்விக்கட்டணம்: ஒவ்வொரு அரையாண்டிற்கும் 50000 குரோணர் முதல் 72500 குரோனர் வரை…அதாவது, 400,000 ரூபாய் முடல் 5, 50, 000 ரூபாய் வரை ஆகும்…சுவீடன் குரோணருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு மாறுதலுக்கு ஏற்ற வகையில், கல்விக்கட்டணமும் இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றம் காணும் என்பதனையும் நினைவில் கொள்க.

8) விண்ணப்பிக்கும் நாட்கள்:

அக்டோபர் 16ஆம் நாள் மற்றும் ஜனவரி 15ஆம் நாள் விண்ணப்பிக்க கடைசி நாட்கள்.

9) வாழ்க்கைச் செலவு:

தனி மனித வாழ்க்கைச் செலவு ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்நிலை பொறுத்து மாறும் எனினும் கல்விக் கற்க வந்து சுவீடனில் வசிக்கும் மாணாக்கர்களிடம் அறிந்துக்கொண்டதன் படி, தங்கும் வீட்டு மாத வாடகை 2500 – 4500 சுவீடிஷ் குரோணர் (அதாவது 19000 – 34000 இந்திய ரூபாய்) எனவும் உணவு மற்றும் இதரச் செலவு 750 குரோணர் முதல் 2000 குரோணருக்குள் (அதாவது 5750 – 15000 இந்திய ரூபாய்) அடக்கலாம் எனக் கூறினர்.

10) சுவீடன் நுழைவுரிமை மற்றும் வதிவிட உரிமை (residence permit) விண்ணப்பம் சமரிப்பது தொடர்பாக, கீழே உள்ள இணைய முகவரியில் படிக்கவும்.

https://www.migrationsverket.se/English/Private-individuals/Studying-in-Sweden/Universities-and-university-college.html?fbclid=IwAR3ax4WG2ZkrHRPiNByy1TY_Exs0r4O463Xn2SJHo6eDm5o2bxCU0iiAWaU

11) சுவீடனின் பல்கலைக்கழகப் பட்டியல்:

The Major colleges in Sweden for Engineering and Technology courses would be :

  • KTH University , Stockholm
  • Uppsala University , Uppsala
  • Chalmers University, Gothenburg
  • Linkoping University
  • Blekinge University, Karlskrona
  • Lund University
  • Malarden University , Vasteras

For Biology related courses the following universities have high reputation:

  • Uppsala University, Uppsala
  • Karolinska University , Stockholm

UPPSALA பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று வரும் குகன் அவர்களின் துணையுடன் Chalmers பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் விஜய் அசோகன் அவர்கள் இத்தகவல்களை சேகரித்து எழுத்து வடிவம் கொடுத்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு : info@tamilsangam.se என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்