சுவீடனில் குடியேறுவோருக்கான கையேடு!

வேலை நிமித்தமாகவோ, வாழ்விட மாற்றம், குடும்ப உறவுகளோடு வாழ்வதற்காகவோ சுவீடன் வர வேண்டி இருப்பின் என்னென்ன செய்ய வேண்டும்? என தமிழ்ச்சமூகத்திற்கு தெளிவுப்படுத்த கோத்தென்பர்க் தமிழ்ச்சங்கம் இதனை தயாரித்துள்ளது.

1) நுழைவுரிமை/வதிவிட உரிமை/பணிக்கான உரிமம் (Visa/Residence Permit/Work Permit)

முதலில் தங்களுக்குத் தேவையான நுழைவுரிமை, அல்லது வதிவிட உரிமை, பணிக்கான உரிமம் தொடர்பான தெளிவினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

a) 3 மாதத்திற்குள்ளான காலத்தில் உறவினர்கள், நண்பர்களைக் காண, உடன் வாழ வேண்டுமாயின் நுழைவுரிமை மட்டும் போதுமானது, அதனை சென்னையின் VFS அலுவலகம் வழியே விண்ணப்பிக்கலாம். (https://www.vfsglobal.se/india/Index.html)

b) பணிக்கான உரிமம் இருப்பின், வதிவிட உரிமையும் ஒன்றாக விண்ணப்பிக்கலாம். https://www.migrationsverket.se/English/Private-individuals/Working-in-Sweden/Employed/How-to-apply.html

c) குடும்பத்திருக்கான வதிவிட உரிமைக்கான விண்ணப்பித்தினையும் அதற்குரிய நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் விதிமுறைகள் குறித்து அறிய, https://www.migrationsverket.se/English/Private-individuals/Moving-to-someone-in-Sweden/Make-an-online-application.html இணையப் பக்கத்தினைக் காணலாம்.

2) வீடு தேடுதல்

வதிவிட உரிமையை விண்ணப்பிக்கும் காலத்திலேயே, சுவீடனில் வசிப்பதற்கான வீடு தேடுவது மிக அவசியம். வாடகைக்கான வீடுகள் கிடைப்பதில் மிகுந்த நெருக்கடி உள்ளாகும் என்பதால், கூடுமான வரையில் இணையம் வழியாகவோ, தெரிந்த நபர்கள் மூலமாகவோ, வேலைக்கு சேரும் பணியிட நண்பர்கள், அலுவலர்கள் மூலமாகவோ வீடு தேடுதல் பணியினை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

இணையம் வழியாக, முகநூல் பக்கங்கள் வழியாக வீடு தேடும்பொழுது பண்பரிமாற்றங்களில் கவனம் அவசியம். சரியான நபர்களிடம் தான் பணம் கையளிக்கிறீர்களா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

சில அங்கீகரிக்கப்பட்ட இணையங்கள் உங்கள் பார்வைக்கு:

https://www.thelocal.se/20181203/accommodation-101-how-to-rent-an-apartment-in-sweden-qasa-tlccu
https://www.samtrygg.se/RentalObject/NewSearch
https://www.blocket.se/annonser/stockholm/bostad?cg=3000&r=11&st=s
https://www.homeq.se/
https://www.bostaddirekt.com/
https://www.residensportalen.com/
http://www.andrahand.se/annonser

3) வருமான வரி அலுவலகத்தில் பதிவு செய்தல்

சுவீடனில் வசிக்கத் தொடங்கியதும் முதல் கட்டமாக செய்ய வேண்டியது, வருமான வரி அலுவலகத்தில் பதிவு செய்து, தனிநபர் தேசிய அடையாள எண்ணை பெறுதல். தேவையான தகவல்களை https://www.skatteverket.se/servicelankar/otherlanguages/inenglish/individualsandemployees/movingtosweden.4.7be5268414bea064694c40c.html

4) தேசிய அடையாள அட்டை

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடையாள எண் அவசியம், அதனைப் பெற்றப் பின், வருமான வரி அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை கொடுத்து, அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலதிகத் தகவல்களை, கீழே உள்ள இணைய இணைப்பில் காணலாம்.

https://www.skatteverket.se/privat/etjansterochblanketter/blanketterbroschyrer/broschyrer/info/721.4.6f9866931215a607a4f80002305.html

5) சமூகக் காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்தல்

அடுத்ததாக, சுவீடனின் சமூகக் காப்பீட்டுக் கழகத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை வருமான வரி அலுவலகத்தில் உறுதிச் செய்துக்கொள்ளுங்கள். மருத்துவக் காப்பீடு, குழந்தைகள் பராமரிப்பு நிதி, பெற்றோர்களுக்கான சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்க இவை அவசியம். பெரும்பாலும் தனிநபர் தேசிய அடையாள எண் உள்ளவர்களுக்கு இப்பதிவு தானாக நடைபெற்றுவிடும் என்றாலும், சமூகக் காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதனை உறுதிச் செய்துக் கொள்ளுதல் நலம்.

https://www.forsakringskassan.se/privatpers/!ut/p/z1/04_Sj9CPykssy0xPLMnMz0vMAfIjo8ziTTxcnA3dnQ28LdyNTQ0cAwMMjU38jby8gg30w_Wj9KOASgxwAEcD_YLsbEUAFUIRCA!!/dz/d5/L0lDUmlTUSEhL3dHa0FKRnNBLzROV3FpQSEhL2Vu/?keepNavState=true

6) வங்கிக் கணக்குத் திறத்தல்:

சுவீடனின் தேசிய அடையாள அட்டை கிடைத்தப்பின் தான் பெரும்பாலுமான வங்கிகளில் கணக்கைத் திறக்க முடியும்.

7) ஐரோப்பிய மருத்துவ அட்டை:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது, உடனடியான அவசர மருத்துவ சிகிச்சைத் தேவைப்பட்டால், உடனடியாக பணம் செலுத்தத் தேவையில்லை. சுவீடனில் ஐரோப்பிய மருத்துவ அட்டையினைப் பெற்று இருத்தல் அதற்கு அவசியம்.

https://www.forsakringskassan.se/privatpers/resa_arbeta_studera_eller_fa_vard_utomlands/resa_utomlands/!ut/p/z1/hY_BTsMwDIafhUOObby1jIlb2KaiDsFQxSi5TNnqJVGLUyXpnp8KOKFt-OZPn_X755LXXJI6Wa2idaS6cf-Qs13-uFxMigWsi_UWQKweVm-lyIvnasbfvwW4MAK4_O9eXlPuxPSvMC-yWxCvm0mWv0zLsoJf4coPFRIvudSd2_90ErTP5ppLj0f06NPBj9jE2Id7BgyOzgfVeks6tCoERWk7UOPSgAyc12eEBGnEDQMcvOtxBAZVF01iKQxe0QGTg_JNkjE4l29ciLy-HMv7zxrsxnSnJ3HzBavwHsE!/dz/d5/L2dBISEvZ0FBIS9nQSEh/

8) சுவீடிஷ் மொழிக் கல்வி:

சுவீடனில் வசிப்பவர்களுக்கான சுவீடன் மொழிப் பயிற்சியினை இலவசமாக பெறலாம்.

மொழிப் பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக, கீழே உள்ள இணையப் பக்கத்தில் தகவல்களை பெறலாம்.

https://vuxenutbildning.stockholm/sfi/swedish-for-immigrants/

9) நீச்சல் பயிற்சி:

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நீச்சல் மிக அவசியம். குழந்தைகளுக்கு அரையாண்டுக் கட்டணம் இருக்கிறது. பெரியவர்களுக்கு முதற்கட்ட நீச்சல் பயிற்சி இலவசமாகக் கற்றுத்தரப்படுகிறது. இவைப் பற்றினத் தகவல்களுக்கு கீழே உள்ள இணையத்தைக் காணலம்.

https://slsgoteborg.se/

10) ஓட்டுநர் பயிற்சி உரிமம்:

நம்மூரில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்று வருபவர்கள், வசிக்கத் தொடங்கியது முதல் ஒரு வருடத்திற்கு அதனை சுவீடனில் பயன்படுத்தலாம். அதன்பிறகான, ஓட்டுநர் உரிமத்திற்கு முறைப்படியான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியும், தகுதித் தேர்வுகளும் முடித்து சுவீடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம். இவைப் பற்றினத் தகவல்களுக்கு கீழே உள்ள இணையத்தைக் காணலம்.

https://www.trafikverket.se/en/startpage/operations/Operations-road/Driving-license-and-driving-tests/